2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்யலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: 2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறையின் அறிவிப்பை எதிர்த்து நித்யானந்த் ஜெயராமன், நாகலைலா உட்பட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பான்கார்டுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், ஆதார் எண் இல்லாமல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கோரி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆதார் அட்டையின் அரசியல் சாசனம் செல்லுபடியாகும் வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினர். அந்த வழக்கில் அரசியல் சாசனம் செல்லுபடியாகும் என்று உறுதி செய்யப்பட்டால் அதன் பின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு திருத்தப்பட்ட வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: