மீனவ கிராமங்களை தனி பஞ்சயாத்தாக்க கோரிய வழக்கு : தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள கடலோர கிராமங்களை தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலோ கிராமங்களை பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி மீனவர் பாதுகாப்பு பேரவை தலைவர் பீட்டர் ராயன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மற்ற கிராமங்களோடு மீனவ கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் மீனவர் சமுதாய மக்கள் பஞ்சாயத்து தலைவர்களாக வருவதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மண்டல் கமிஷனின் பரிந்துரை படி மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்க வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும். மொத்தமுள்ள 608 மீனவ கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் சென்று சேர்வதில்லை என்றும், மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: