சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சாந்தோம் ஆகியவை இணைந்து அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, எதிர் வரும் SSC Graduate level tier-1 போட்டி தேர்வுக்கு முன் ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.