தமிழகம், புதுச்சேரியில் வெப்பசலனத்தால் ஓரிரு இடங்களில் மழை

சென்னை:  தமிழகம், புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக நேற்று ஓரிரு பகுதிகளில் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 1.62 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்க்கு அதிகமாக பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 101.84 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் - 100.94, திருத்தணி- 100.76, மதுரை விமான நிலையம் - 100.40, பரங்கிப்பேட்டை- 100.30 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகர், புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 96.8 டிகிரி வரை பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: