விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ மொபைல் ஆப் மூலம் விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாவது: 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் மீது மத்திய அரசு நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் முறையான பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்திற்காக 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசு 2 லட்சத்து 12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.  நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்துள்ளனர். இ-நம் என்ற நேரடி வர்த்தக முறையை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருள்களுக்கான உரிய விலையை பெற முடியும். இத்திட்டம் மூலம் இடைத்தரகர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: