சென்னை: கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைக்கு அப்பால் தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.