பொதுமக்கள் ஒத்துழைத்தால் தூத்துக்குடியில் போலீஸாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் : ககன்தீப் சிங்

தூத்துக்குடி: பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தூத்துக்குடியில் போலீஸாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசின் சிறப்பு அதிகாரியான ககன்தீப் சிங் கூறியுள்ளார். நேற்று பல்வேறு தரப்பினரிடம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையை அடுத்து, இன்று தூத்துக்குடியில் அமைதி நடவடிக்கைகளை துவக்கியிருப்பதாக கூறினார். நெல்லைக்கு தூத்துக்குடியிலிருந்து அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுள்ள நிலையில், நகரப் பேருந்துகளையும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர் பால் தட்டுப்பாட்டை போக்க சுமார் 11,000 லிட்டர் பால் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசியதாகவும், அவர்களுக்கு உரிய வசதிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இயல்பு நிலை திரும்புவதற்காக அவப்போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்தி வருவதாக கூறினார். இதனிடையே தூத்துக்குடி காய்கறி சந்தையில் இருப்பு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் காய்கறி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார் .

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: