டெல்லி; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ' நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்' என சமூக வலைதளத்தின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதன்படி ஃபிட்னஸ் சேலன்ஜ் #FitnessChallenge என்ற ஹேஷ்டேக் மூலம், இந்தியர்கள் தங்களது உடற்பயிற்சி முயற்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக பதிவிட கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு, நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு தம்மை போல செய்து வீடியோ வெளியிடுமாறு ஃபிட்னஸ் சவால் விடுத்தார்.