தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் எதிரொலி: தமிழகம் முழுவதும் கடையடைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில்  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என நேற்று  அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்  என்று தமி்ழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து இருந்தார். இந்த கடையடைப்பு போராட்டத்தில் 30 லட்சத்திற்கும்  அதிகமான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார் . மேலும் பணம் கொடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் பொதுமக்களை கொன்றுள்ளது என்றும்,  ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு பணம் செல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.  பணத்தை வாங்கி கொண்டு காவல்துறையினர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெள்ளையன் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: