புழல் சிறை வார்டன் தவறாக விடுவித்த கைதி பிரபல ரவுடி மாங்கா ரவி சரண்

புழல்: பிரபல ரவுடி மாங்கா ரவி போலீசில் சரணடைந்தார். தண்டையார்பேட்டை போலீசார் கடந்த 2017ம் ஆண்டு ரவி (எ) ரவிச்சந்திரன் (எ) மாங்கா ரவி (26) என்பவரை கொலை வழக்கில்  கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இதை அடுத்து அவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. எனவே, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாங்கா ரவி மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டார். ‘‘குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லும்’’ என கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை பெற்ற சிறைத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சேகரன் சரியாக படித்து பார்க்காமல் விடுவிக்கும் உத்தரவு என்று நினைத்து, கடந்த மாதம் 28ம் தேதி மாங்கா ரவியை விடுதலை செய்துவிட்டார். பின்னர், மாங்கா ரவி தவறாக விடுதலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக புழல் சிறை வார்டன் பிரதீப்பை தற்காலிக பணிநீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென பிரபல ரவுடி மாங்கா ரவி புழல் சிறைக்கு வந்தார். பின்னர் ஜெயிலர் உதயக்குமார் முன்பாக சரண் அடைந்தார். அப்போது, தன்னை போலீசார் தேடுவதை செய்தித்தாள் பார்த்து திரும்பியதாக வாக்குமூலம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: