தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

தூத்துகுடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணி வன்முறையாக வெடித்தது. பேரணியில் ஈடுபட்ட போராட்டகாரர்களை  தடுக்க போலீசார் முதலில் தடியடியில் ஈடுபட்டனர். போராட்டம் கட்டுபாட்டில் வராத காரணத்தினால் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.  துப்பாக்கிச் சூடு என்றால் முதலில் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிப்பதுதான் வழக்கம். வானத்தை நோக்கி சுட்டபின் கலவரம் அடங்காவிடில்,  இடுப்புக்கு கீழே சுடுவார்கள். ஆனால் தூத்துக்குடியில் போலீசார் போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொதுமக்கள் குற்றம்  சாட்டியுள்ளனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 11 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும்  பதற்றம் நிலவி வருகிறது. இதனையத்து தூத்துகுடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு  தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்,  துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர்  தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: