மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது : தமிழக அரசு வாதம்

டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதிப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது. கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி தீர்ப்பை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக மத்திய அரசு மீது தமிழக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தனை நாட்களாக எந்த திட்டத்தையும் இறுதி செய்யாத மத்திய அரசு, 10 நாட்களில் செயல்திட்டத்தை தாக்கல் செய்வோம் என்பதை எப்படி நம்ப முடியும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் விவசாயிகள் போராட்டம் :

வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படாததால் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி அரியலூரை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வாய்ப்பில்லை என தமிழக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: