புதிய செல்போன் சிம் கார்டுகளை பெறுவதற்கு ஆதார் என்ணை வழங்க கட்டாயப்படுத்தக் கூடாது : தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

டெல்லி : செல்போன் சிம் கார்டுகளை பெறுவதற்காக ஆதார் என்ணை வழங்குமாறு பொது மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் சமுக நலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதேபோல செல்போன் சிம் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் புதிய செல்போன் சிம்கார்டுகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை எந்த திட்டத்திற்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து செல்போன் சிம் கார்டுகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்குமாறு பொது மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஆதார் எண்ணிற்கு பதிலாக ஓட்டுநர் உரிமம், பாஸ்பொர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற மாற்று ஆவணங்களை ஏற்று கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories: