பழங்கால நாணயம் கண்டுபிடிப்பு : கர்நாடக வரலாற்று குழுவினர் நேரில் ஆய்வு

தர்மபுரி: தொப்பூர் அருகே பண்டைய கால நாணயம் கண்டுபிடிப்பு எதிரொலியாக தர்மபுரி, கர்நாடகா வரலாற்று பேராசிரியர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உம்மியம்பட்டியை சேர்ந்த விவசாயி கிருபாகரன் (35). இவருக்கு சொந்த நிலத்தில் கடந்த வாரம் மாடுகளை கொண்டு ஏர்உழவு செய்த போது பழங்காலத்து நாணயம் 5 கிடைத்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் அவரது ஆய்வு குழு மாணவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஐந்தும் செம்பு நாணயம் எனவும், பாண்டியர் கால, திப்பு சுல்தான் காலத்தை சேர்ந்தது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, நேற்று தொப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சந்திரசேகர், கர்நாடக பல்கலைக்கழக ஆய்வுத்துறை தலைவர் மேத்ரி மற்றும் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் நேற்று வரலாற்று நாணயங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா செக்காரப்பட்டி கிராமத்தில் பெருங்கற்கால ஈமக்குழிகள், இரும்பு கழிவுகள், புதிய கற்கால ஆயுதங்கள், சிறுவர் விளையாட்டு பொருட்கள், நடுகற்கள் என பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.

Related Stories: