வைகுண்ட ஏகாதசி – கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30க்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, நாமக்கல் மலைக்கோட்டை அரங்கநாதர் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள், அரியலூர் கோதண்ட ராமசாமி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சேலம் கோட்டை பெருமாள், திருவள்ளுர் வீரராகவ பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருமயம் சத்தியமூர்த்திபெருமாள், மயிலாடுதுறை திருஇந்த ளூர் பரிமள ரங்கநாதர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது….

The post வைகுண்ட ஏகாதசி – கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: