×

சீனியர் கிரிக்கெட் வீரர்களை இப்படியா நடத்துவது? அமீஷா பட்டேல் ஆவேசம்

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா (37), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியின் போது, 2027ல் உலக கோப்பைக்கான தேர்வுக்குழு திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை என்றும், லார்ட்ஸ் ஒருநாள் போட்டியே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியானது.

இதுபற்றி பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘பாலிவுட் தொடர்பு இல்லாத ஒரு பதிவு இது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த முன்னணி நட்சத்திர வீரர்கள், இந்த கிரிக்கெட் காலத்தில் நடத்தப்படும் விதம் எனக்கு பேரதிர்ச்சி அளிக்கிறது. இதை ஒரு கொடூரமான கிரிக்கெட் காலம் என்று சொல்ல வேண்டும். மிகவும் வெட்கக்கேடானது இது’ என்று ஆவேசத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Ameesha Patel ,London ,India ,England ,Lord ,Rohit Sharma ,Sophia Gardens ,Cardiff ,2027 World Cup ,
× RELATED சினிமாவில் நிறவெறியும், உருவகேலியும் அதிகரிப்பு! சமீரா ரெட்டி வேதனை