×

இயற்கையான பண்ணை வீடு

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் கண்டாலாவில் (மும்பை அருகே) அமைந்துள்ள ‘ஜஹான்’ ஃபார்ம்ஹவுஸ், வெறும் வீடு மட்டுமல்ல, அது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் சொகுசு ரிசார்ட். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இல்லம், நவீன கட்டுமானத்திற்கும் இயற்கைக்கும் நடுவே கட்டப்பட்டுள்ள இந்த வீடு, நவீன வசதிகளுடன் இயற்கையோடு இணைந்து புதிய அனுபவத்தை கொடுக்கிறது. சுனில் ஷெட்டியின் வீட்டின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் இயற்கை சார்ந்த வடிவமைப்புதான்.

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மரங்கள் மற்றும் பாறைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், பெரிய மரங்கள் வீட்டின் கூரை மற்றும் முற்றத்தின் வழியாக செல்வதைப் பார்க்கலாம். இது ஒரு காட்டின் நடுவில் அமைந்திருக்கும் எக்கோ-ரிட்ரீட் போன்ற உணர்வைத் தருகிறது. சுனில் ஷெட்டி பல பேட்டிகளில், தனக்கு மரம், செடிகள் மற்றும் இயற்கை மீது அதிக பிரியம் உண்டு என கூறியுள்ளார். அந்த எண்ணத்தில்தான் இந்த வீட்டைக் கட்டியுள்ளார். வீட்டின் அலங்காரத்தில் பெரிய மரச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. காய்ந்த மரக்கிளைகளைக் கூட அலங்காரத்திற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

Tags : Bollywood ,Sunil Shetty ,Jahan ,Khandala ,Mumbai ,
× RELATED ஆபாச போட்டோக்கள் அனுப்பிய 400 பேர்: காயத்ரி ரெமா பகீர் புகார்