×

சினி மினி நியூஸ்

* ‘கட்டா குஸ்தி 2’ படத்தை பார்த்து விஷ்ணு விஷாலை மொபைலில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். படத்தை பார்த்து தான் என்ஜாய் செய்ததாக பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

* ‘லப்பர் பந்து’ பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்க தேர்வாகியுள்ளார். இந்த படத்தில் நடித்தபடியே ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ படத்தில் தனுஷ் நடித்து வருவார்.

* ரன்வீர் சிங்கை தான் பம்மி ஆன்ட்டி என்றுதான் செல்லமாக அழைப்பதாக பூஜா ஹெக்டே கூறியிருக்கிறார். காரணம், செட்டில் அனைவரது குடும்ப விஷயங்களையும் தெரிந்துகொள்வதில் ரன்வீர் ஆர்வம் காட்டுவாராம். அதனால் இந்த பெயர் சூட்டியுள்ளதாக அவர் சொல்கிறார்.

* ரஜினிகாந்த் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் ஏற்கனவே சிம்ரன், ராசி கன்னா என 2 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். இப்போது இதில் ருக்மணி வசந்த் மெயின் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

* ‘லப்பர் பந்து’ படத்தில் நடிப்பதற்கு முன்பாக, ஏ.ஆர்.முருகதாஸ் பெயரைச் சொல்லி சிலர் தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றினார்கள் என புகார் கூறியுள்ளார் சுவாசிகா.

Tags : Cine Mini News ,Rajinikanth ,Vishnu Vishal ,Dhanush ,Tamilarasan Pachamuthu ,Preethi Mukundan ,Rajkumar Periyasamy ,Ranveer Singh ,Pammi ,
× RELATED ஆபாச போட்டோக்கள் அனுப்பிய 400 பேர்: காயத்ரி ரெமா பகீர் புகார்