
மும்பை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா, இந்தியிலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ‘காக்டெயில் 2’ என்ற இந்தி படம் வெளியானது. ஷாகித் கபூர் ஹீரோவாக நடித்தார். இதில் மற்றொரு ஹீரோயினாக பாலிவுட் நடிகை கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். படம் வெளியான பிறகு அனைத்து விமர்சனங்களிலும் கிரித்தி ஷெட்டிக்கே பாராட்டுகள் குவிந்தன. ராஷ்மிகா ஓரம்கட்டப்பட்டார். மேலும் படத்தில் ராஷ்மிகா நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன.
இதை படம் பார்த்து தெரிந்துகொண்ட ராஷ்மிகா, கடும் அப்செட் ஆகிவிட்டாராம். கடந்த வாரம் வரை இந்த படத்தை தனது சோஷியல் மீடியாவில் புரமோட் செய்து வந்த ராஷ்மிகா, படம் வெளியான பிறகு புரமோட் செய்வதை நிறுத்திவிட்டார். தற்போது சோஷியல் மீடியாவில் அவர் அமைதி காத்து வருகிறார். இது தொடர்பாக அவரிடம் பாலிவுட் மீடியாவில் சிலர் பேச முற்பட்டபோது, பதில் கூற ராஷ்மிகா மறுத்துள்ளார்.

