×

காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்ட இசை ஆல்பம்

சென்னை: டஸ்க் மியூசிக் நிறுவனம் வழங்கும் ‘கவுத்துட்டா’ இசை வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னையில் ஒரு மாலில் நடைபெற்ற சிறப்பு விழாவில், காமெடி நடிகர் சதீஷ் இசை வீடியோவை வெளியிட்டு வாழ்த்தினார். இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகரான அனல் ஆகாஷ் உருவாக்கியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

காதல், கனவு,தோல்வி, ஏக்கம்,எதிர்பார்ப்பு ஏமாற்றம், எதிர்நீச்சல்,உற்சாகம் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இசை வீடியோ, அதன் வித்தியாசமான காட்சியமைப்பாலும், இசைத் தரத்தாலும் கவனம் ஈர்த்துள்ளது. கதை மற்றும் இயக்கம்: திவாகர் குமார். ஒளிப்பதிவு: ஸ்ரீராம் நீலகண்டன். தயாரிப்பு நிறுவனம்: ரெயின்ட்ராப் கிரியேஷன்ஸ். விஷ்ணுப்ரியா, ஜி.கே. ஷாலோமி, ஆகாஷ் ஜீவ், கார்த்திக், விக்கி, ஆண்டன் வின்சென்ட் இ. நடித்துள்ளனர்.

Tags : Sathish ,Chennai ,Tusk Music ,Anal Akash ,
× RELATED மனு விமர்சனம்…