
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து கட்டா குஸ்தி 2 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆகும் அந்த படத்தின் புரோமோஷனுக்காக பல பேட்டிகளை விஷ்ணு விஷால் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் தன்னிடம் ஒரு பிரபல இயக்குனர் திமிராக போனில் பேசியதாகவும், அவருக்கு தான் உடனே பதிலடி கொடுத்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அந்த இயக்குனர் இரண்டு முறை விஷ்ணு விஷாலுக்கு போன் செய்துள்ளார். விஷ்ணு விஷால் எடுக்கவில்லையாம். அதே இயக்குனர் வேறொரு நாள் போன் செய்தபோது, விஷ்ணு விஷால் எடுத்து பேசியுள்ளார்.
அப்போது அந்த இயக்குனர், ‘‘நீங்க என்ன ரஜினியா, கமல்ஹாசனா? இல்ல, சூர்யாவா? ஏன் இரண்டு முறை போன் செய்தும் எடுக்கல’’ என அந்த இயக்குனர் கேட்டுள்ளார். இதைக் கேட்டு விஷ்ணு விஷாலுக்கு கோபம் தலைக்கேறியதாம். உடனே, ‘‘நீங்க மணிரத்னமா, ஷங்கரா இல்லை வெற்றிமாறனா?’’ என கேட்டு இருக்கிறார். இந்த தகவலை விஷ்ணு விஷாலே தெரிவித்தார். யார் அந்த இயக்குனர் என நெட்டிசன்கள் தற்போது விவாதம் செய்ய தொடங்கி இருக் கின்றனர்.

