×

கூட்ட நெரிசலில் சிக்கிய ராஷ்மிகா பாதுகாத்து அழைத்து சென்ற கிரித்தி சனோன்

மும்பை: ராஷ்மிகா மந்​த​னா, கிரித்தி சனோன், ஷாகித் கபூர் நடித்​துள்ள ‘காக்​டெய்ல் 2’ இந்தி திரைப்​படம், நாளை மறுநாள் வெளியாகிறது. ஹோமி அடஜானியா இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி புனேவில் உள்ள வணி​கவளாகம் ஒன்​றில் நடை​பெற்​றது. இதற்​காக ராஷ்மிகா மந்​த​னா, கிரித்தி சனோன், ஷாகித் கபூர் ஆகியோர் அங்கு சென்​றனர்.

இவர்​களைக் கண்​டதும் ரசிகர்​கள் பாது​காப்பு தடுப்​பு​களை உடைத்​துக் கொண்டு முண்டியடித்​த​தால் அந்த இடம் பரபரப்பானது. பாது​காப்​புக் காரணங்​களால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்​துச் செய்​யப்​பட்​டது. கூட்ட நெரிசலில் இருந்து ஷாகித் கபூர் கோபத்​துடன் வெளியேறி​னார். கூட்ட நெரிசலுக்கு நடு​வே, கிரித்தி சனோன், ராஷ்மிகா சிக்​கிக்​கொண்​டனர். உடனடி​யாக ராஷ்மிகா மந்தனாவைத் தன்கைகளால் அரவணைத்​துப் பாது​காத்​தார் கிரித்தி. பாலிவுட்டில் இதுபோன்ற சம்பவங்களை பலமுறை கிரித்தி எதிர்கொண்டுள்ளார். ராஷ்மிகாவுக்கு முதல்முறை என்பதால் அவரை பத்திரமாக தனது சகோதரி போல் பாதுகாத்து அழைத்து சென்று காரில் அமர வைத்தார் கிரித்தி. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கிரித்தி சனோனின் இந்த பாதுகாப்பு உணர்வை சமூக வலை​தளங்​களில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு நிகழ்ச்சி ஏற்​பட்​டாளர்​களைக் கடுமையாக விமர்​சித்தும் வரு​கின்​றனர்.

Tags : Rashmika ,Kriti Sanon ,Mumbai ,Rashmika Mandanna ,Shahid Kapoor ,Homi Adajania ,Pune ,
× RELATED நிச்சயதார்த்தம் செய்த 2 ஆண்டுகளுக்குள் காதலரை பிரிந்த சுனைனா