×

காக்டெயில் 2வில் நடிக்க பயந்தேன்: ராஷ்மிகா

 

மும்பை: சைப் அலிகான், தீபிகா படுகோன் நடித்து வெற்றி பெற்ற படம் காக்டெயில். இதன் இரண்டாம் பாகமாக காக்டெயில் 2 உருவாகியுள்ளது. இந்த இந்தி படத்தில் ஷாஹித் கபூர், கிரித்தி சனோன் ஆகியோருடன் ராஷ்மிகாவும் நடித்திருக்கிறார். அவர் கூறும்​போது, “இதில் தி​யா என்ற கதா​பாத்​திரத்​தில் நடித்துள்​ளேன். இந்த கேரக்​டர் ஆரம்​பத்​தில் பெரும் பயத்தை ஏற்படுத்​தி​யது. இது​வரை நான் நடித்த படங்​களில், அதி​க​மாக நகர்ப்​புற தோற்​றத்​தில் நடித்​த​தில்​லை. இதில் முழு​வதும் அப்படிப்பட்ட தோற்​றம் என்​ப​தால் யோசித்​தேன்.

இது​வரை நடித்த படங்​களின் காரண​மாக, ரசிகர்​கள் சீரியஸான அல்​லது எமோஷனலான நடிப்பை என்​னிடம் எதிர்​பார்க்​கிறார்​கள். அதை விடுத்​து, முதல்​முறை​யாக நட்​பு, காதல், கொண்​டாட்​டம் நிறைந்த கலகலப்பான கதா​பாத்​திரத்​தில் நடித்​திருப்​ப​தால், ‘இது நமக்கு சரியாக இருக்​கு​மா?” என்ற சந்​தேகம் இருந்​தது. இருப்பினும், ரசிகர்​களுக்கு ஆச்​சரி​யத்​தைக் கொடுக்க வேண்​டும் என்பதற்காகவே அந்த சவாலை ஏற்றுக்​கொண்​டேன்” என்று தெரிவித்​துள்​ளார்.

 

Tags : Saipan ,Deepika Padukone ,Shahid Kapoor ,Kriti Sanon ,Dia ,
× RELATED ஹீ- மேன்: மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ் – திரை விமர்சனம்