×

ஆணாதிக்கம் குறித்து மாதுரி தீட்சித் ஆவேசம்

இந்தி படவுலகின் சீனியர் நடிகை மாதுரி தீட்சித் நடித்துள்ள ‘மா பெஹன்’ என்ற படம், கடந்த 4ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியானது. பிளாக் காமெடி திரில்லரான இதை சுரேஷ் திரிவேணி இயக்கினார். மாதுரி தீட்சித்துடன் திரிப்தி டிம்ரி, ரவி கிஷன் நடித்தனர். இந்நிலையில் மாதுரி தீட்சித் அளித்துள்ள பேட்டியில், ‘ஆண்களின் காதல் சமூகத்தில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகின்றன. ஆனால், அதே சூழலில் பெண்கள் கடுமையான விமர்சனங்களுக்கும், எதிர்மறையான பார்வைக்கும் உள்ளாகின்றனர். இது ஒரு ஆணாதிக்க சமூகம்.

ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் இருந்து வருகிறது. ஒரு ஆணுக்கு பல காதலிகள் இருக்கலாம். ஆனால், ஒரு பெண் அதை செய்தால், அவள் தவறானவளாக சித்தரிக்கப்படுகிறாள். அவளை பற்றி எதிர்மறையான பிம்பங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் பல எழுதப்படாத விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை ‘மா பெஹன்’ படம் உடைத்தெறியும். இதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களை போன்ற யதார்த்தமான குழப்பங்களும், குறைபாடுகளும் கொண்டதாக இருக்கும்’ என்றார்.

Tags : Madhuri Dixit ,OTDI ,Suresh Triveni ,Tribti Timri ,Ravi Kishan ,
× RELATED நடிகர், நடிகைகளின் சம்பள விகிதம் மாற வேண்டும்: காஜல் அகர்வால் கோரிக்கை