- ஆர்யா
- சென்னை
- பா. ரஞ்சித்
- கியான் கிருஷ்ணகுமார்
- நிகில் முரளி
- நிகழ்ச்சி மக்கள்
- நிக்கிலா விமல்
- வைஷ்ணவி சைதன்யா
- ஜி.வி. பிரகாஷ்
சென்னை: ஆர்யா, தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ என்ற படத்திலும் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘அனந்தன் காடு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஆர்யாவின் 40வது படத்தை நிகில் முரளி என்பவர் இயக்குகிறார். தனது தி ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் ஆர்யா தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகிய 2 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா தனது சோஷியல் மீடியாவில் ஆர்யாவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘சிரிப்பும் அன்பும் நிறைந்த படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் எங்களது புன்னகைகள் நிலைத்திருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் படம் வெளியாகிறது.

