×

‘ரேனிகுண்டா 2’ லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

தனித்துவமான கதை மற்றும் திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ரேனிகுண்டா’ என்ற படம், கடந்த 2009ல் திரைக்கு வந்தது. இதை ஆர்.பன்னீர்செல்வம் எழுதி இயக்கியிருந்தார். அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்து வரும் 5 சிறுவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரவேற்பு பெற்றிருந்த இப்படத்தின் 2வது பாகம், ‘ரேனிகுண்டா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். கிங்ஸ் ஸ்டுடியோ, பன்னீர்செல்வம் பிலிம் பேக்டரி நிறுவனங்களுக்காக ஆர்.பன்னீர்செல்வம் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.

மனு ரவிச்சந்திரன் இசையில் யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, லால்குடி என்.இளையராஜா அரங்குகள் அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, கே.ராஜசேகர் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். பிருந்தா, அசார் நடனக் காட்சி அமைத்துள்ளனர். இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு, ஷம்மி திலகன், நிஷாந்த், தமிழ்செல்வம், சுந்தீப், ஆஹானா, கனிஃபா, அருண், ஜெசிந்தா, வேல.ராமமூர்த்தி, ஹரீஷ் பெராடி, சுஜாதா, சுர்பி நடித்துள்ளனர்.

Tags : Vijay Sethupathi ,R. Panneerselvam ,
× RELATED நடிகர், நடிகைகளின் சம்பள விகிதம் மாற வேண்டும்: காஜல் அகர்வால் கோரிக்கை