×

இருமொழிகளில் உருவான ‘இருமுடி கட்டு’

ரவி தேஜாவின் முதல் நேரடி தமிழ் மற்றும் தெலுங்கு படம், ‘இருமுடி கட்டு’. இது தந்தை, மகள் பாசம், ஆன்மீகம் மற்றும் மனதை தொடும் உணர்வுப்பூர்வமான படமாக உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் தயாரித்துள்ள பான் இந்தியா படமான இதை டி-சீரிஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் வழங்குகின்றனர். முக்கிய வேடங்களில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நட்சத்திரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, மீசாலா லஷ்மன், ராஜ்குமார், காசி ரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாலம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் நடித்துள்ளனர்.

விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். பிரவீன் புடி எடிட்டிங் செய்ய, நரேஷ் பாபு.பி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது. மகளை உயிராக நேசிக்கும் தந்தை, மகளின் வேண்டுகோளுக்காக மதுப்பழக்கத்தை விட்டு, பகவான் ஐயப்பனின் பாதையை தேர்ந்தெடுத்து ஆன்மீக பாதைக்கு மாறும்போது சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது.

Tags : Ravi Teja ,Naveen Yerneni ,Y. Ravi Shankar ,Mythri ,Pan ,India ,Gulshan Kumar ,Bhushan Kumar ,T-Series ,Priya Bhavani Shankar ,Sai Kumar ,Baby Natchathira ,Ajay Ghosh ,Ramesh Indira ,Swasika ,Meesala ,
× RELATED பரிமளா அண்ட் கோ விமர்சனம்…