- ஸ்வஸ்திக் விஷன்ஸ்
- பா. ரஞ்சித்
- தென்பதியன்
- கேஜ்ஆர்
- கார்த்திக் நேதா
- ஜிப்ரான் வைபோதா
- வைக்கம் விஜயலட்சுமி

டிரைலர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனத்தை ஈர்த்த ‘அங்கீகாரம்’ என்ற படத்துக்கு சென்சார் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிக்க, பா.ரஞ்சித் உதவியாளர் தென்பாதியான் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜிப்ரான் வைபோதா இசையில் கார்த்திக் நேத்தா எழுதிய ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.
உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி, தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. முக்கிய வேடங்களில் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், மன்சூர் அலிகான் நடித்துள்ளனர். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். தினேஷ்குமார் எடிட்டிங் செய்ய, ராமு தங்கராஜ் அரங்குகள் அமைக்க, ஷெரீப் நடனப் பயிற்சி அளித்துள்ளார். வரும் 26ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

