சென்னை: நடிகர் ராகவா லாரன்சின் மகள் படம் இயக்க உள்ளார். டான்ஸ் மாஸ்டராக தனது பணியை தொடங்கிய ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகரானார். படம் இயக்குவதிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டார். இதனிடையே, சினிமாவை தாண்டி ஏழை எளிய மக்கள், ஊனமுற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு சொந்த செலவில் மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு உதவி வருவதன் மூலம் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
தற்போது ‘காஞ்சனா 4’ படத்தினை உருவாக்கி வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக தன் மகள் ராகவி இயக்குனராக அறிமுகமாகும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகவி, அமெரிக்காவில் திரைப்பட உருவாக்கம் சார்ந்த படிப்பை முடித்துள்ளார். தற்போது இயக்குனராகத் தன் திரைப்பயணத்தைத் தொடங்க அவர் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

