×

இன்ஸ்டா பதிவுக்காக உடலை வருத்தாதீங்க: பெண்களுக்கு டாப்ஸி அறிவுரை

சென்னை: இன்ஸ்டாகிராமில் உடல் அமைப்பை காட்டுவதற்காக உங்களை நீங்களே வருத்துக்காதீங்க என நடிகை டாப்ஸி அறிவறுத்தியுள்ளார். அவர் கூறியது: கொழுப்பு இல்லாத தட்டையான வயிற்றை பெறவே எல்லோருக்கும் மோகம் இருக்கிறது. நானும் ஒரு காலத்தில் அந்த மோகத்தில் இருந்தேன். ஒருவர் தனது உடற்பயிற்சியின் வரம்புகளை மீறும்போது, உடலில் தேங்கி நிற்கும் நீர் தேக்கம் அதிகரித்துக்கொண்டே போகும்.

அதனால் மக்கள் ஆரோக்கியமான வரம்பிற்கு மேல் உடற்பயிற்சி செய்ய மெனக்கெடக் கூடாது. ஒவ்வொரு பெண்ணின் உடலும் வித்தியாசமானது, அவரவர்களுக்கு ஹார்மோன் மாறுபடும். எனவே, ஒவ்வொரு நாளும் உடல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமற்றது மற்றும் கடினமானது. என்னை நானே மிகவும் வருத்திக்கொண்ட பிறகு, மிகவும் தாமதமாக இதை நான் ஏற்றுக்கொண்டேன்.

பெண்களுக்கு வயிற்றில் சிறிதளவு கொழுப்பு இருப்பது முக்கியம். வயிற்றுக்குக் கீழே சிறிதளவு நீர் தேங்குவது இனப்பெருக்க உறுப்புகளைப் பாதுகாக்கிறது. ஒரு பெண்ணாக இருப்பதால், உங்களுக்கு அந்தப் பாதுகாப்பு தேவை. இதை என் ஊட்டச்சத்து நிபுணர் எனக்கு விளக்கினார். அதனால் இன்ஸ்டாகிராமில் கச்சிதமான உடல் அமைப்பை காட்டுவதற்காக மட்டும் உங்களை நீங்களே வருத்திக்கொள்ளாதீர்கள். உடலில் லேசான சதையும், கொழுப்பும் இருப்பதுதான் உண்மையில் ஆரோக்கியமானது என்றார்.

Tags : Instagram ,Taapsee ,Chennai ,
× RELATED ஆக்‌ஷன் திரில்லரில் லிஜோமோல் ஜோஸ்