×

பெண்களுக்கு ராசி கன்னா திடீர் டிப்ஸ்

தென்னிந்திய படவுலகின் முன்னணி நடிகையாக இருந்த ராசி கன்னா, திடீரென்று பாலிவுட் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தியதால், அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் புதுப்பட வாய்ப்பு குறைந்துவிட்டது. அதோடு, பின்னணி பாடவும் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அடிக்கடி போட்ேடாசெஷன் நடத்தி, தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், உடல் ஆரோக்கியம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

இது குறித்து ராசி கன்னா கூறுகையில், ‘பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். எனது 20 வயதுகளில் உடல் தோற்றத்தின் பொலிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால், 30களில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வதே உண்மையான உடற்தகுதி என்பதை புரிந்துகொண்டேன். தங்களின் உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள், ‘கிராஷ் டயட்’ முறைகளை தவிர்க்க வேண்டும்.

தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து புலம்பாமல், சத்தான உணவுகளை முறையாக உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமே நமது எதிர்கால வாழ்க்கைக்கு நிரந்தர அடிப்படை என்பதை உணர்ந்துகொள்வது மிகவும் கட்டாயமானது. எனவே, தினமும் தவறாமல் உடற்பயிற்சிகளை மேற்ெகாண்டு, தியானத்திலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நம்மால் எப்போதுமே உற்சாகமாகவும், திடகாத்திரமாகவும் இருக்க முடியும்’ என்றார்.

Tags : Rasi Khanna ,Bollywood ,
× RELATED தந்தை, மகன் பாசக்கதையில் சிவராஜ்குமார்