×

‘பிரேமலு 2’ கைவிடப்பட்டதாக ஹீரோ தகவல்

நஸ்லென் கே.கபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்பட பலர் நடித்த மலையாள படம், ‘பிரேமலு’. இதை பஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான ரொமான்டிக் காமெடி படமான இது, கடந்த 2024ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெற்றிபெற்றது. ரூ.3 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம், ரூ.135 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்களில் ஒருவரான திலீஷ் போத்தன், ‘பிரேமலு 2’ படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்துவிட்டன.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லியிருந்தார். ஆனால், ‘பிரேமலு’ 2வது பாகம் உருவாக வாய்ப்பு இல்லை என்று, இப்படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லென் கே.கபூர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘2வது பாகத்துக்கான திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு சரியாக அமையவில்லை. கதைக்களம் தேவையான அளவுக்கு முழுமை அடையாததால், இப்படத்தின் 2வது பாகம் உருவாகாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். சில தொழில்நுட்ப காரணங்களினாலும், கதையை அடுத்த நிலைக்கு சரியாக கொண்டு சேர்க்க முடியாததாலும், தயாரிப்பு தரப்பு இப்போதைக்கு அந்த யோசனையை கைவிட்டுள்ளது’ என்றார்.

Tags : Hero ,Nazlen K. Kapoor ,Mamita Baiju ,Shyam Mohan ,Fahadh Faasil ,Dileesh Pothan ,Shyam Pushkaran ,
× RELATED தந்தை, மகன் பாசக்கதையில் சிவராஜ்குமார்