- கருப்பு
- சென்னை
- விஜய்
- ஜெகதீஷ்
- சூர்யா
- ரஜினிகாந்த்
- கமல்ஹாசன்
- அஜித் குமார்
- விக்ரம்
- தனுஷ்
- சிம்பு
- சிவகார்த்திகேயன்
சென்னை: விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் நடத்தும் ‘ரூட்’ நிறுவனம், அரசியல் பக்கம் திரும்பியதால் தமிழ் சினிமா உலகம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. முதல் கட்டமாக சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படம் 4 நாட்களில் ரூ.147 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் தமிழ் திரையுலகினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் புது படங்கள் வெளியாகும்போது, அந்த படம் நன்றாக இருந்தாலும் அதை கடுமையாக விமர்சிக்கவே சமூக வலைத்தளங்களில் பல குழுக்கள் தனித்தனி கூட்டமாக இயங்கும். முடிந்தவரை அந்த படத்தை டேமேஜ் செய்வதுதான் அந்த குழுவின் முக்கிய நோக்கம். இந்த குழுக்களை கையாள்வது ஜெகதீஷின் ரூட் நிறுவனம்தான். இந்த நிறுவனம் மேலே குறிப்பிட்ட நடிகர்களின் படங்களை தாக்குவது மட்டுமின்றி, அந்த நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது, அவர்களைப் பற்றிய வதந்திகளை பரப்புவது உள்ளிட்ட வேலைகளையும் மறைமுகமாக பார்த்து வந்தது.
அஜித்குமாரின் ‘விடா முயற்சி’, ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ படங்கள் ஓரளவுக்கு வினியோகஸ்தர்களை பாதிக்காத வசூலை தந்திருக்கும். ஆனால் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்ப்பது, மீம் கிரியேட் செய்வது என அட்டூழியங்கள் செய்தனர்.
அதேபோல் கடந்த பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ‘ஜனநாயகன்’ படத்தை ஒன்றிய சென்சார் போர்டு தடை விதித்துவிட்டது. ‘பராசக்தி’ படம் மட்டும் திரைக்கு வந்தது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத ரூட் நிறுவனம் விஜய் ரசிகர்களை தூண்டிவிட்டு, ‘பராசக்தி’ படத்துக்கு எதிராக ட்ரோல் செய்ய வைத்தது. இதனால் அந்த படத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. முன்னணி நடிகர்கள் படங்கள் மட்டுமல்ல, பிரபல நடிகைகள் பலரைப் பற்றியும் தவறான கருத்துகளை பகிர்வது, அவர்களின் இமேஜை பாதிக்கச் செய்வது, அவர்களின் டீப் ஃபேக் புகைப்படங்களை வெளியிடுவது என அநியாயம் ெசய்வதை ரூட் நிறுவனம் வழக்கமாக கொண்டிருக்கிறது. இதில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியங்கா மோகன், ராஷ்மிகா, ஓவியா உள்பட பல நடிகைகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததும் ரூட் நிறுவனம், தனது பார்வையை சினிமாவிலிருந்து அரசியல் பக்கம் திருப்பியது. குறிப்பாக குழந்தைகளையும் டீன்ஏஜர்களையும் குறிவைத்து மைண்ட்வாஷ் செய்தது. இப்போது விஜய் முதல்வரானதும் அடுத்த பிரதமர் அவர்தான் என்று மற்றொரு பிம்பத்தை ரூட் நிறுவனம் கட்டமைத்து வருகிறது. அதே சமயம், சினிமாவிலிருந்து ரூட் நிறுவனம் ஒதுங்கிய நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் சூர்யா.
அவரது ‘கருப்பு’ திரைப்படம் கடந்த வௌ்ளிக்கிழமை வெளியாகி, 4 நாட்களில் ரூ.147 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இந்த படத்தை பற்றியோ சூர்யாவை பற்றியோ எந்த தாக்குதலும் சோஷியல் மீடியாவில் நடக்கவில்லை. படம் வெளியாகி, 4 நாட்கள் வரை பைரசி பிரச்னையும் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம், சினிமாவை ஆட்டிப்படைத்த மாபியா கும்பலான ரூட் நிறுவனத்தின் திசை மாறியதுதான் என்றும் இப்போது அதன் பிடி வலுவிழந்ததால் தமிழ் சினிமா வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளதாகவும் திரையுலகை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் இனி தமிழ் சினிமா தொடர்ந்து பெரிய வெற்றிப் படங்களை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

