×

அமைச்சர் மகனுடன் கங்கனா காதலா?

முன்னணி நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனரும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனவத்தும், மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கங்கனா ரனவத் கூறுகையில், ‘சிராக் பஸ்வான் எனது நெருங்கிய நண்பர். நான் அவரை காதலிக்கவில்லை. அவர் 10 வருடங்களுக்கு முன்பு என்னுடன் இணைந்து நடித்தார். அன்று முதல் எங்களுக்கு இடையே நட்பு நீடித்து வருகிறது.

அவரிடம் நான் ரொமான்ஸ் செய்ய நினைத்தால், அது நடக்காது என்று அனைவருக்கும் தெரியும். திரைத்துறையில் இருந்து வந்த அவரை நான் பெரிதும் மதிக்கிறேன்’ என்றார். கடந்த 2011ல் இந்தியில் தன்வீர் கான் இயக்கிய ‘மைலே நா மைலே ஹம்’ என்ற படத்தில் கங்கனா ரனவத், சிராக் பஸ்வான் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் சிராக் பஸ்வான் அறிமுகமானார். பிறகு இருவரும் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டனர். எப்போதாவது அவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் சந்தித்து பேசுவார்கள். இப்போது நாடாளுமன்றத்துக்கு சென்று வருவதால், நேரில் சந்திக்கும் வாய்ப்பு தானாக அமைகிறது. அதை வைத்து இதுபோன்ற வதந்திகள் பரவி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Kangana Ranaut ,BJP ,Chirag Paswan ,Union Minister ,Ram Vilas Paswan ,
× RELATED மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்…