×

எல்லாவித கேரக்டரிலும் நடிக்க ஆசை: மாஸ்டர் பினு ஜான் போஸ்கோ

சென்னை: பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு. டி. ஜான் போஸ்கோ, பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு முதல் நிலை மதிப்பெண்களுடன் வெற்றிகரமாகப் பயணம் செய்வதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் ஜி5 நிறுவனம் தயாரிக்கும் இணையத்தொடர்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணி புரிந்த பிஜு வி. டான் போஸ்கோவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு படத் தொகுப்பாளரின் மகன் நடிப்பிலும் படிப்பிலும் கவனம் செலுத்தி வெற்றிப் பாதையில் செல்வதை இயக்குநர்கள் பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எஸ்.ஆர். பிரபாகரன், யூகி சேது, இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார்கள். பினு ஜான் போஸ்கோ கூறும்போது, ‘‘எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். ‘டீன்ஸ்’ படத்தைப் போல கதையின் நாயகனாக வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்’’ என்றார்.

Tags : Master Binu John Bosco ,Chennai ,Binu ,Sarvesh ,Parthiban ,D. John Bosco ,Sundara Pandian ,Kathirvelan Kadhal ,Zee5 ,
× RELATED 16 வருடங்களுக்கு பிறகு ‘ரேனிகுண்டா 2’