- சோனாலி பிந்த்ரே
- மும்பை
- புனே
- சந்திரகாந்த் பாலு ஷிண்டே
- கமல்பாய்
- சோனாலி
- கோல்டி பெல்
- உக்ஷான்
- மாவல் தாலுகா
மும்பை: இந்தியில் நடித்து வந்தாலும் தமிழில் ‘காதலர் தினம்’, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. இந்நிலையில், சோனாலியின் கணவர் கோல்டி பெஹல் மீது புனேவை சேர்ந்த விவசாயி சந்திரகாந்த் பாலு ஷிண்டே மற்றும் அவரது தாய் கமல்பாய் ஆகியோர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புனே மாவட்டம் மாவல் தாலுகா உக்சன் கிராமத்தில் எங்களது கட்டுப்பாட்டில் 32 ஆயிரம் சதுர அடி குத்தகை நிலம் உள்ளது.
அந்நிலத்தை எங்களுக்கு தெரியாமல் அதன் உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அந்த நிலத்தின் ஒரு பகுதியை 2021ல் நடிகை சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோல்டி பெஹல் வாங்கியுள்ளார். சோனாலி பிந்த்ரே, அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த பொய் வழக்கு தங்கள் மீது தொடரப்பட்டுள்ளதாக சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.
