×

ராமர் கதாபாத்திரத்துடன் வெளியான ராமாயணா டீசர்

மும்பை: நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமயணா’ என்ற தலைப்பில் படம் உருவாகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் கடந்த 2024ஆம் ஆண்டு இணையத்தில் கசிந்து வைரலானது.

கடந்த ஆண்டு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முன்னோட்டத்துடன் வெளியாகியிருந்தது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் லக்‌ஷ்மன் கதாபாத்திரத்தில் ரவி துபேவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களாக ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து ‘ராமா’ எனும் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ராமர் கதாபாத்திரத்தின் வித்தியாசமான தோற்றங்கள் பிரம்மீப்பூட்டும் காட்சிகளுடன் இடம் பெற்றுள்ளது.

Tags : Ram ,Mumbai ,Namit Malhotra ,Nitesh Tiwari ,Ranbir Kapoor ,KGF ,Yash ,Ravana ,
× RELATED மன உளைச்சலால் ஜப்பான் சென்ற ஹன்சிகா