மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் கழிப்பறை; இடத்தை மாற்றுங்கள்..! செங்கை கலெக்டருக்கு பக்தர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தின் மையப் பகுதியில் புராதன சின்னமான அர்ச்சுணன் தபசு அருகே ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 63 திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலுக்கு, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.  கோவில் வளாகத்தில் பழமையான கிணறும் அதன் அருகே குடிநீர் தொட்டியும் உள்ளது. இந்நிலையில்,  பக்தர்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு 6 கழிப்பறைகளை கட்ட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது.  இதனையடுத்து, தற்போது கழிப்பறை கட்ட  பணிகள் தொடங்க ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் மணல், செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை கோவில் வளாகத்தில்  கட்டும்போது அங்கு கடுமையான துர்நாற்றம் வீசும். மேலும், கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அருகே  தண்ணீர் பிடிக்க, குடிக்க வருபவர்களுக்கும்,  சுற்றுலாப் பயணிகள்  சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே,  கழிப்பறை கட்டும் இடத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒதுக்குப்புறமான ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் கழிப்பறை; இடத்தை மாற்றுங்கள்..! செங்கை கலெக்டருக்கு பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: