×

‘சேயோன்’ படத்தில் கடவுளுக்கு எதிரான கதையா?

வெற்றிபெற்ற ‘தாய் கிழவி’ படத்தை தொடர்ந்து சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கும் ‘சேயோன்’ என்ற படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் கதை ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு எதிரானது என்பது போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிவக்குமார் முருகேசன், ‘நான் இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை பார்த்தேன்.

சிவகார்த்திகேயன், ராதிகா ஆகியோர் இதற்காகவே மதுரைக்கு வந்தனர். நான் இயக்கும் `சேயோன்’ படத்தில், இரண்டு தெய்வங்களை கும்பிடுபவர்களின் கதை அடங்கியிருக்கிறது. கண்டிப்பாக யாருக்கும் எதிராகவோ அல்லது யாருக்கும் சாதகமான படமாகவோ இது இருக்காது. எல்லா தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கும் படமாகவே இருக்கும்’ என்றார்.

Tags : Sivakumar Murugesan ,Kamal Haasan ,Sivakarthikeyan ,Radhika ,Madurai ,
× RELATED சொந்தப் படம் தயாரிக்கும் ஹீரோக்கள்