×

சொந்தப் படம் தயாரிக்கும் ஹீரோக்கள்

நடிப்பில் அதிக கவனம் செலுத்திய ரியோ ராஜ், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க ஆயத்தமாகி வருகிறார். இரண்டு படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ள அவர், தற்போது ‘ராம் இன் லீலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டுக்குள் இரு படங்களையும் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ள அவர், முன்னதாக டி.வி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி இருந்தார். பிறகு ‘சவாரி’, ‘சத்ரியன்’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘பிளான் பண்ணி பண்ணணும்’, ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’, ‘ஜோ’, ‘நிறம் மாறும் உலகில்’, ‘ஸ்வீட்ஹார்ட்!’, ‘லவ் மேரேஜ்’, ‘ஆண் பாவம் ெபால்லாதது’ ஆகிய படங்களில் நடித்தார். ‘ஜோ’, ‘ஸ்வீட்ஹார்ட்!’ ஆகிய படங்களில் பாடல்களும் எழுதியிருந்தார்.

அவர் தயாரிக்கும் படத்தில் அவர்தான் ஹீரோவாக நடிக்கிறாரா என்பது பற்றி சொல்லவில்லை. அதுபோல், பிரதீப் ரங்கநாதனும் சொந்தப் படம் தயாரிக்க திரைப்பட நிறுவனம் தொடங்கியுள்ளார். ‘கோமாளி’ மூலம் இயக்குனரான அவர், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். விரைவில் அவர் நடித்துள்ள ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் தனது உதவியாளரை இயக்குனராக்கி தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதில், ‘டியூட்’ படத்தில் அவரது ஜோடியாக நடித்திருந்த மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இது கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையுடன் உருவாகிறது.

Tags : Rio Raj ,T. V ,
× RELATED விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’