×

மீண்டும் வெள்ளித்திரையில் அமிதாப் பச்சனுடன் இணைந்த கமல்

ஐதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘கல்கி 2898’ படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்தனர். துல்கர் சல்மான், அனா பென், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக 1000 கோடி சம்பாதித்து சாதனை படைத்தது. மேலும் கமல் இப்படத்தில் சுப்ரீம் யாஸ்கின் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரளவைத்தார். அவரது தோற்றம் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது கல்கி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இப்படத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் இணைந்து நடித்தனர். முதல் பாகத்தில் இவர்கள் இணைந்து நடித்த காட்சி எதுவும் இடம்பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனுடன் நடிப்பதை வரவேற்று, இருவரும் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் அமிதாப் ஷேர் செய்துள்ளார். இருவரும் இணைந்து கடைசியாக 1985 ஆண்டு ‘கிரஃப்தார்’ இந்தி படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Kamal ,Amitabh Bachchan ,Hyderabad ,Kamalhasan ,Prabas ,Deepika Padukone ,Kamal Hassan ,Prabaz ,Dulgar Salman ,Ana Ben ,Vijay Devarakonda ,Supreme Yaskin ,
× RELATED வெப்தொடர்: விமர்சனம்