×

நிலச்சரிவில் கால் இழந்த பெண்ணுக்கு செயற்கை கால், வீடு: நெகிழ வைத்த மம்மூட்டி

சென்னை: கேரளாவில் இடுக்கி மாவட்டம், அடுமாலியில் கடந்த அக்டோபரில் கனமழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்தனர். சந்தியா என்ற பெண், ஒரு கால் இழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மம்மூட்டி, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். தனது அறக்கட்டளை மூலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தியாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. இது மட்டுமின்றி, மலங்கர செரியன் தேவாலய நிர்வாகத்துடன் மம்மூட்டியின் அறக்கட்டளை இணைந்து வீடு இழந்த பலருக்கு வீடுகளை கட்டித் தர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் ஒரு வீட்டை சந்தியாவுக்கு வழங்கப்படும் என மம்மூட்டி தெரிவித்துள்ளார். மம்மூட்டியின் இந்த செயல், பலரையும் நெகிழ செய்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரது உதவியை பாராட்டி வருகிறார்கள்.

Tags : Chennai ,Kerala ,Idukki district ,Atumali ,Sandia ,Mammooti ,Kochi ,Malangara Cherian church administration ,
× RELATED வெப்தொடர்: விமர்சனம்