×

சம்பளத்தால் வாய்ப்புகளை இழக்கும் ருக்மணி

கன்னட நடிகை ருக்மணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், அவருக்கு தமிழில் புதுப்பட வாய்ப்புகள் தேடி வரவில்லை. எனவே, தெலுங்கில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பான் இந்தியா படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்திய காரணத்தால், புதுப்பட வாய்ப்பு கிடைப்பது என்பது கடினமாக இருக்கிறது என்கிறார்கள்.

தற்போது நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’, தெலுங்கில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ருக்மணி வசந்த், தெலுங்கில் சர்வானந்த் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இதை னு வைட்லா இயக்குகிறார். இளவரசி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

Tags : Rukmani ,Rukmani Vasanth ,Vijay Sethupathi ,Sivakarthikeyan ,Rishabh Shetty ,
× RELATED தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை...