×

தீபிகா இடத்தில் சாய் பல்லவி

நாக் அஸ்​வின் இயக்​கத்​தில் வெளி​யான பான் இந்தியா ​படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமி​தாப்​ பச்​சன், கமல்ஹாசன் உள்​பட பலர் நடித்​தனர். ரசிகர்​களிடையே நல்ல வரவேற்​பை பெற்றிருந்த இப்படம், 1,100 கோடி ரூபாய்க்​கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உரு​வாகி வரு​கிறது. முதல் பாகத்​தில் சுமதி என்ற கேரக்டரில் நடித்திருந்த தீபிகா படு​கோன், திடீரென்று இப்படத்தில் நடிக்க முடியாது என்று வில​கி​னார்.

படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற பாலிசி உள்பட பல்வேறு நிபந்தனை​களை விதித்​த​தாகவும், தயாரிப்பு நிறு​வனம் அதை ஏற்​காத​தால் அவர் வில​கிய​தாக​வும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வேறொரு நடிகையிடம் பேசி வருகின்றனர். ஆனால், அனுஷ்கா ஷெட்டியை மீண்டும் தனது ஜோடியாக நடிக்க வைக்க பிரபாஸ் தீவிர முயற்சி செய்து வருகிறார். முன்னதாக அலியா பட், பிரி​யங்கா சோப்ரா ஆகியோரிடம் படக்குழு பேசி வரு​வ​தாக கூறப்​பட்​டது. தற்போது சாய் பல்​ல​வியிடம் பேசுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று தெரிகிறது.

Tags : Sai Pallavi ,Deepika ,Nag Ashwin ,Pan India ,Prabhas ,Deepika Padukone ,Amitabh Bachchan ,Kamal Haasan ,Sumathi ,
× RELATED மகனை ஹீரோவாக இயக்கும் தனுஷ்