×

அல்லு அர்ஜூன் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்

ரஜினி​காந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ என்ற படத்தை இயக்​கியிருந்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டார். இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்​கு கிடைத்​தது. ஆனால், திடீரென்று அவர்​கள் அதிரடி ஆக்‌ஷன் இல்​லாத, நகைச்​சுவை கலந்த குடும்பக்கதையை எதிர்​பார்த்​த​தால், அப்​படத்​தில் இருந்து வில​கி​விட்டார். தற்போது ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஆகிய படங்களில் கார்த்தி பிசி​யாக இருப்​ப​தால், ‘கைதி 2’ படத்துக்கு அவர் எப்போது கால்ஷீட் கொடுப்பார் என்று தெரியவில்லை.

இந்நிலை​யில், அல்லு அர்​ஜூன் நடிக்​கும் படத்தை இயக்க மைத்ரி மூவி மேக்​கர்ஸிடம் அட்வான்ஸ் வாங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், வரும் மே மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார். தற்போது அட்லீ இயக்​கும் பான் வேர்ல்ட் படத்​தில் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். அதை முடித்​த பிறகே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். இது பான் இந்தியா படமாக ​உருவாக்கப்படுகிறது. ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்க, அனிருத் இசை அமைக்​கிறார்.

Tags : Shraddha Kapoor ,Allu Arjun ,Lokesh Kanagaraj ,Rajinikanth ,Karthi ,Kamal Haasan ,
× RELATED மகனை ஹீரோவாக இயக்கும் தனுஷ்