
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது இந்தியில் இரு படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ராமராக ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணா’ என்ற படத்திலும் நடித்துள்ள அவர், ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆமிர் கான், ‘இது ஒரு தூய்மையான, கிளாசிக்கான காதல் கதை கொண்ட படம். நான் விரும்பும் ஜானரில் உருவாகியுள்ள காதல் இது. ஒரு ரசிகனாக, இனிமையான காதல் படங்களுக்கு நான் அடிமை. பொதுவாகவே நான் இனிமையான காதலை விரும்புவேன். இது சற்று மேஜிக்கல் காதல் கதையும் கூட.
முதல்முறை கேட்டபோதே இக்கதையை ஆழமாக நேசித்தேன். இறுதியில் சாய் பல்லவியை தேர்வு செய்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ெதன்னிந்தியாவில் அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை. ‘ஏக் தின்’ படத்தில் அற்புதமாக நடித்துள்ளார். எனது மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்துள்ளார். அவர் எனது மகன் என்பதால் அதிகமாக பேசக்கூடாது என்று நினைக்கிறேன். இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு அற்புதமான படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார். வரும் மே 1ம் தேதி வெளியாகும் இப்படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

