- கந்தார சப்தமி கவுடா
- சென்னை
- லூசியாவின் சதீஷ் நினாசம்
- காந்தாரா
- சப்தமி கவுடா
- பி. சுரேஷ்
- சம்பத் மைத்ரேயா
- கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே
- யாஷ் ஷெட்டி
- ரவிசங்கர்
- வினோத் வி. டான்டில்
- லாவிட்
- பூர்ணசந்திர தேஜஸ்வி
- வர்தன் ஹரி
- ஜெய்ஷ்ணவி
- சதீஷ் நினாசம்
- தேவராஜ் கிருஷ்ணப்பா
- விருத்தி கிரியேஷன்ஸ்
- சதீஷ் பிக்சர் ஹௌஸ்
சென்னை: கன்னட முன்னணி நடிகர் ‘லூசியா’ சதீஷ் நினாசம், ‘காந்தாரா’ சப்தமி கவுடா, பி.சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் நடித்துள்ள படம், ‘ரைஸ் ஆஃப் அசோகா’. வினோத் வி.தோன்ட்லே இயக்கியுள்ளார். லவித் ஒளிப்பதிவு செய்ய, பூர்ணசந்திர தேஜஸ்வி இசை அமைத்துள்ளார். விருத்தி கிரியேஷன்ஸ், சதீஷ் பிக்சர் ஹவுஸ் சார்பில் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம், தேவராஜ் கிருஷ்ணப்பா தயாரித்துள்ளனர். அடுத்த மாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது சதீஷ் நினாசம் பேசுகையில், ‘நான் கன்னடத்தில் முன்னணி ஹீரோ. தமிழ்நாட்டில் என்னை யாருக்கும் தெரியாது. 10 வருடங்களில் 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். காரணம், நான் உணர்வுப்பூர்வமான கதைகளை மட்டுமே தேர்வு செய்வேன்’ என்றார். சப்தமி கவுடா பேசும்போது, ‘இதில் அம்பிகா என்ற கேரக்டரில், கடந்த 1980களில் இருந்த பெண்ணாக நடித்துள்ளேன். அவளுக்கு என்று தனியாக ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறாள் என்பது உச்சக்கட்ட காட்சி. இந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ரசிகர்களுக்கும் முழுமையாக பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழ் ரசிகர்கள் என்மீதும், எனது படக்குழு மீதும் அதிக அன்பை செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

