×

18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்த நடிகை சரண்யா பாக்யராஜ்

சென்னை: இயக்குனர் கே.பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ், தமிழில் பாரிஜாதம் உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். சில காலமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதனையடுத்து தனக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை பார்த்துக்கொள்வது கடினம் என்றும் கூறி பேட்டிக் கொடுத்தார். காதல் தோல்வியால் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். தற்போது ஆடை அணிகலன்கள் தொடர்பான ஆன்லைன் ஷாப்பிங் பணியை செய்து வருகிறார். தற்போது சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சரண்யா. பல ஆண்டுகளாக வெளியில் வராத சரண்யா, இடையில் சில படங்களுக்கு ஆடைவடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 18 ஆண்டுகள் கழித்து அவர் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை நெட்டிசன்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

Tags : Saranya Bhagyaraj ,Chennai ,K. Bhagyaraj ,Saranya ,
× RELATED தமிழ் நடிகைகளுக்கு நடிக்க தெரியாது:...