- விஜய் சேதுபதி
- சம்யுக்தா மேனன்
- ஹைதெராபாத்
- இந்தியா
- தபு
- துனியா விஜய்குமார்
- விடிவி கணேஷ்
- பிரம்மஜி
- பூரி ஜெகந்நாத்
- சார்மி கவுர்
- இணைக்கிறது
- ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா
- ஜேபி மோஷன் பிக்சர்ஸ்
ஐதராபாத்: நேற்று முன்தினம் விஜய் சேதுபதியின் பிறந்த நாள். அதை கொண்டாடும் விதமாக, ‘ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு’ என்ற பான் இந்தியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன் ஜோடியுடன் தபு, துனியா விஜய்குமார், விடிவி கணேஷ், பிரம்மாஜி நடித்துள்ளனர். புரி கனெக்ட்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஜே.பி.நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்துக்கு ‘ஸ்லம் டாக்’ என்று பெயரிடப்பட்டு, அதன் கீழே ‘33 டெம்பிள் ரோடு’ என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களில் துடிப்பான இசையை வழங்கி தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ளார்.
