×

எஸ்.ஜே.சூர்யா படத்துக்கு திடீர் சிக்கல்

ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பிசியாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பத்து வருடங்களுக்கு பிறகு ‘கில்லர்’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக ‘அயோத்தி’ பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் இதே தலைப்பில் படத்தை வெளியிடும் எஸ்.ஜே.சூர்யா, கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இத்தலைப்பை தேர்வு செய்ததாக சொன்னார்.

இந்நிலையில், தெலுங்கில் பூர்வாஜ் இயக்கத்தில் அவரது மனைவி ஜோதி பூர்வாஜ் நடித்துள்ள படத்துக்கு ‘கில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படம் தெலுங்கில் அதே பெயரில் வெளியாகுமா அல்லது வேறு தலைப்பு சூட்டப்படுமா என்று ெதரியவில்லை. இப்படத்தின் தலைப்புக்கு தெலுங்கில் மட்டும் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : SJ Surya ,Ayodhi ,Preethi Asrani ,A.R. Rahman ,Poorvaj ,Jyothi Poorvaj ,
× RELATED ஹீரோவாக நடிக்க மாட்டேன்: அனிருத் திட்டவட்டம்